சனி பகவான்
சனி தோஷநிவர்த்தி பரிகாரம் வழிபாட்டுமுறை

சனிபகவானே இவ்வாலயத்தில் வந்து ஈசனை வணங்கி இவர் செய்த பாவங்களை போக்கிக்கொண்டு, தோஷநிவர்த்தி பெற்று பாபவிமோசனம் கிட்டியது போல் தாங்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சனிதோஷத்தையும் மற்றும் பூர்வஜென்ம, இந்த ஜென்மங்களில் அறிந்தும் அறியாமலும் தாங்கள் செய்துள்ள தங்கள் பாவதோஷங்களையும் அனைத்து தோஷங்களையும் நீங்கிட பின்குறிப்பிட்டுள்ளவாறு இவ்வாலயத்தில் வந்து சிவன், சக்தி, சனிபகவான், ஆஞ்சேநேயரை வணங்கி தோஷநிவர்த்தி பரி்காரங்கள் செய்துகொண்டால் சனிதோஷத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீங்கும் அப்படி முழுவதும் நீங்காவிட்டாலும் அவைகளைப்பொறுத்துக்கொள்ளும் சக்தியாவது ஏற்பட்டு மற்றும் தாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி பாவவிமோசனம் கிட்டி பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதியுடன் வாழலாம் என்பது நிச்சயம்.

பூர்வஜென்ம இந்த ஜென்மத்தில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களாலும் மற்றும் சனிதோஷ தாக்கத்தினால் ஏற்படும் சங்கடங்களும் அதற்காக சனிதோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மற்றும் முறைகள்

கோசாரத்தில் சனிபகவான்

த்வாதசாஷ்டம ஜந்மஸ்த்தா
சந்யர்க்காங்காரகா குரு
குர்வந்தி ப்ராண ஸந்தேஹம்
ஸ்தாந ப்ரம்சம் தநகூடியம்:

அதாவது, கோசாரத்தில் அவரவர் பிறந்த ராசிக்கு 12, 8, 1 ஸ்தானங்களில் சனி, சூரியன், செவ்வாய், குரு என்னும் நான்கு கிரஹங்களும் ஸஞ்சாரம் செய்யும் போது மற்றும் அவரவர் பிறந்த ராசிக்கு 7,4,2, ஸ்தானங்களில் ஸஞ்சாரம் செய்யும் போது

  • உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற சந்தேகம்
  • இடம் விட்டு இடம் மாற்றமும்(அதாவது ஓரு உத்தியோகத்திலிருந்து மற்றொரு உத்தியோகத்திற்க்கு மாற்றலும், அல்லது தான் வசிக்கும் ஊர், வீடு இவைகளிலிருந்து வேறு ஊர், அல்லது வேறு வீட்டுக்கு மாற்றலும், அல்லது இருக்கும் உத்தியோகத்திலிருந்து நீக்கப்படுதலும்)
  • தனகூடியமும் (அதாவது,பணம் அதிகமாகச் செலவாகுதல், கடன் தொல்லை, திருடு போகுதல், செய்தொழிலில் நஷ்டம் திருமணத்தடை, மகப்பேறுயின்மை, படிப்பில் மந்தம், பிரச்சனைகளால் மனநிம்மதியின்மை, முதலியனவும் ஏற்படக்கூடும். ஆகவே, சனிபகவான் அவரவர் ராசிக்கு 12, 8, 1, 2, 4, 7-ல் ஸஞ்சாரம் செய்யும் காலத்தில் அவருக்கு சாஸ்திரங்களில் கூறிய முறைபடி ஜப-ஹோம- தானங்களாகிய சாந்திகளைச் செய்ய வேண்டும்
ஏழரைநாட்டுச் சனிபகவான்

அவரவர் ஜாதகத்தின்படி அவரவர் பிறந்த (சந்திர) ராசிக்கு 12, 1, 2 என்னும் இந்த முன்று ராசிகளில் சனிபகவான் ஸஞ்சாரம் செய்யும்போது ஏழரை நாட்டுச் சனி என்ற பெயரால் குறிக்கப்படுகிறார். ஏழரைநாட்டுச் சனி என்பதை ஏழரை வருஷச் சனி என்றும் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, எழரை வருஷம் சனியின் சாரத்தையொட்டி இந்த பெயர் வந்தது.

சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 வருடங்கள் ஸஞ்சாரம் செய்வார் இதற்கேற்ப, மூன்று ராசிகளில்- அதாவது அவருடைய ஜென்மராசியிலும் 2, 12 ஸ்தானங்களிலும் ஸஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை நாட்டுச் சனியின் காலமாகும்.

இந்த காலத்தை மிகவும் சிரமம் மிகுந்த காலம் என்பர் இந்த காலத்தில் உயிருக்கே ஆபத்தான நோய்கள் ஏற்படக் கூடுமென்றும், வீணாகப் பண நஷ்டமும், கடன் தொல்லை, திருமணத்தடை, மகப்பேறுயின்மை, படிப்பில் மந்தம், பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு மனநிம்மதியின்மை கஷ்டங்களும் ஏற்படுமென்றும் ஜோதிட சாஸ்திரம் எச்சரிக்கின்றது.

சனிக்ரஹம்

சூரியன் முதலாக ஒன்பது கிரகங்களில் இயற்கையாகவும் அவரவர் ஜாதக அமைப்பின் படியும் துன்பங்களை அளிப்பதற்காக ஏற்பட்ட கிரகம் சனிபகவான். இவர் ஆயுள் காரகர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. இவரே ஆரோக்யகாரகரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆகவே, ஜாதக ரீதியாகவும், கோசார ரீதியாகவும், தசாபுத்திகள் ரீதியாகவும் சனிபகவானுக்கு பலம் குறைவாக இருந்தால் உயிருக்கு ஆபத்தும், மேற்சொன்ன கஷ்டங்கள் ஏற்பட்டு வாழ்கையில் சந்தோஷம் இழக்க நேரிடும் என சாஸ்திரம் எச்சரிக்கின்றது.

இதற்கேற்ப, ஏழரை நாட்டுச் சனியும் அஷ்டமத்தில் சனியும், கண்ட சனியும், அர்த்தாஷ்டம சனியும் இருக்கப்பெற்றவர்கள் படும் பாடுகள் எண்ணிற்கடங்காதவை.

ஆகவே, அத்தகைய காலங்களில் செய்வதறியாது தவிக்கின்ற மக்கள் தெய்வத்தின் மீதும் கிரகங்களின் மீதும் சாஸ்திரங்களின் மீதும் நம்பிக்கை வைத்து முறைப்படி சனிபகவானுக்கு ப்ரிதியாக சாந்திகர் மாவை அனுஷ்டிப்பதற்காக சனிக்கிரக பூஜை, மந்தரஜபம், ஹோமம், தானம், ஸஹஸ்ரநாமம் அர்ச்சனைகள் அஷ்டோத்தரம் அர்ச்சனைகள் முதலிய தோஷநிவர்த்தி பரிகாரங்களை கீழ்கண்ட ராசிகாரர்கள் இவ்வாலயத்தில் செய்தல் வேண்டும்.

9-வாரம் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு ஸஹஸ்ரநாமக்களை செய்தால் ஸ்கலஷேமங்களும் உண்டாகும்.

சனியைப்போல் கொடுப்பவனுமில்லை, கெடுப்பவனுமில்லை என்றொரு பழமொழி உண்டு. ஆகவே சனிக்ரக ப்ரீதியாக கீழ்கண்ட ராசிக்காரர்கள் அனுஷ்டித்தால் துன்பம் நீங்குவது மட்டுமின்றி அவன் அருளால் சகல சுகங்களையும் பெறுவது திண்ணம்.

சனிபகவான் 16-12-2014 அன்று துலாம் ராசியிலிருந்து விசாகம் ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த சனிபெயர்ச்சி வரை வரை சனிதோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரம் உடைய, ராசிக்காரர்கள், மற்றும் பரிகார முறைகள்,

  • 12-ம் இடத்தில் விரய சனி பிடித்துள்ள மூலம், பூராடம், உத்திராடம், அனுஷம், கேட்டை பாதம் தனுசு இராசிக்காரா்களுக்கு 7 1/2 வருடம் சனி ஆரம்பமாகும்,
  • 1-ம் இடத்தில் ஜென்ம சனி பிடித்துள்ள விசாகம் 4 ஆம் பாதம் அனுஷம், கேட்டை, விருச்சிக ராசிகாரா்களுக்கு 5 1/2 வருடம் சனியாகும்,
  • 2-ம் இடத்தில் பாத சனி பிடித்துள்ள சித்திரை 3, 4 ஆம் பாதம் சுவாதி விசாகம் 1, 2, 3-ஆம் பாதம் துலாம் ராசிகாரா்களுக்கு 2 1/2 வருடம் சனியாகும்,
  • 4-ம் இடத்தில் அா்த்தாஷ்டம சனி பிடித்துள்ள மகம், பூரம், உத்திரம் -1ம் பாதம் சிம்ம ராசிகாரா்களுக்கு 2 1/2 வருடம் சனியாகும்,
  • 7-ம் இடத்தல் கண்ட சனி பிடித்துள்ள கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதம் ரிஷப ராசிக்காரா்களுக்கு 2 1/2 வருடம் சனியாகும்,
  • 8-ம் இடத்தில் அஷ்டம சனி பிடித்துள்ள அஸ்வினி, பரணி, கிருத்திகை-1 ம் பாதம் மேஷ ராசிகாரா்களுக்கு 2 1/2 வருடம் சனியாகும், மேற்கண்ட படி சனி பிடித்துள்ள ராசிகாரர்கள், சனி பகவானின், குரு பைரவர் என்பதால் பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும், அவர்களுக்கு பிடித்துள்ள சனி விடுதலை ஆகும் நாள்வரை சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி, அர்ச்சனைகள், செய்தும் அன்னதானம் பரிகாரங்கள் செய்தல் வேண்டும். ஆண்டு முழுவதும் வரமுடியாதவர்கள் குறைந்த பட்சம் முறைப்படி 9 வாரம் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு விரதமிருந்து சனிகவசத்தினை பாராயணம் செய்தும் 108 முறை ஆலயத்தினை வலம் வருதல் வேண்டும் முடியாதவர்கள் வாரம் 12 சுற்று வீதம் 9 வாரம் ஆலயத்தினை வலம் வருதல் வேண்டும், சனிபகவானுக்கு எள்ளு விளக்கு ஏற்றியும், கருநில பூ வான கருங்குவளை(லேடி பூ) கருப்புநிற வஸ்த்ரம், அபிஷேகம். வன்னி இலைகளில் அர்ச்சனைகள் செய்தும், எள்ளு சாதம் சர்க்கரைபொங்கல் செய்து விநியோகம் செய்தல் வேண்டும். குறைந்த பட்சம் ஓரு வாரமாவது தோஷ நிவர்த்தி பரிகார ஜப ஹோமம், திலஹோமம், செய்தல் வேண்டும். சனிபகவான் வாகனமான நடமாடும் தெய்வமாக இவ்வாலயத்திற்க்கு வரும் காக்கைகளுக்கு கோதுமையால் செய்யப்பட்ட அன்னம் பாலிக்க வேண்டும், மற்று முள்ள நடமாடும் தெய்வங்களான மாடு, நாய்க்கும் அன்னதானங்கள் செய்தால் சனிதோஷ தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேற்கண்ட முறைகளின் படி பூஜைகள், தானங்கள் செய்வதால் சனிபகவானுக்கு பாவவிமோசனம் கிட்டியது போல் தங்களுக்கும் சகல தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிட்டி பாவவிமோசனம் பெற்று குடும்பத்தில் நிம்மதியுடன் வாழலாம் என்பது நிச்சயம்.