சித்தர்கள், சனிபகவான் இங்குள்ள ஈஸ்வரனை வணங்கி அவர்களுக்கு பாவவிமோசனம் கிட்டியது போல் தாங்கள் பூர்வ ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களால் உங்கள் வாழ்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளான திருமணத்தடை, மகப்பேறுயின்மை, உடல் உபாதை நோய்கள், கடன்தொல்லை, வேலையின்மை, இருக்கின்ற வேலை நிலைத்து நிற்காமல் போகுதல், கணவன் மனைவியிடம் ஓற்றுமையின்மை, குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் மனகஷ்டம், பிரச்சனைகளால் மனநிம்மதியின்மை ஆகியவை எல்லாம் நீங்கிட 36 நாட்கள் தினமும் காலையில் குளித்து விட்டு காலையில் 5.30 மணிக்கு இவ்வாலயத்துக்கு வந்து இங்குள்ள ஈசனை வழிபட்டு தங்களுக்குள்ள பிரச்சனைக்கான பரிகாரங்களை கேட்டறிந்து அதற்குண்டான இங்குள்ள தெய்வங்களை வழிபாடு செய்து, ஜப-ஹோமங்கள், சாந்தி அபிசேகம், தீபங்கள் ஏற்றி, அர்ச்சனைகள் செய்து தினமும் 9 முறை 36 நாட்கள் ஆலயத்தினை வலம் வந்து, தானங்கள் செய்து 36 நாட்களில் தினமும் 15 நிமிடமாவது தியான நிலையில் மனதை ஒரு நிலை படுத்தி தியான நிலையில் அமர்ந்து 36 நாட்கள் வழிபட்டால் உங்களுக்குள் ஏற்படும் ஒரு மனசாந்தி தாங்களே உணர்ந்து உங்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்ற்ங்களை நீங்களே உணர்வீர்கள் இதனை உணர்ந்து வாழ்வில் சந்தோஷம் அடைந்தவர்கள் பல பக்தர்கள் உள்ளனர்.
மேற்படி கோவிலில் நடைபெறும் சனிதோஷ நிவர்த்தி பரிகார ஹோமம், நவகிரஹ ஹோமங்கள், பாவவிமோசனம் பரிகாரங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், கோவில் இணையதளம் மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ, ஆலய அலுவலகத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.